‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் இந்த குண்டு மீட்கப்பட்ட நிலையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.

IMG 20211121 WA0069

#SriLankaNews

Exit mobile version