சிகரெட்டுக்கான விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவிகையில்,
சிகரெட்டுகளுக்கான விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைச் சூத்திரம் 2022 முதல் 2026 வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனூடாக வருடத்துக்கு சிகரெட் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கும். விலைச்சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தீர்மானம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுக்கான வரிகளை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இத் திட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் – என்றார்.