சுன்னாகம் – சமிஞ்சை சந்தியில் விபத்து! – ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

சுன்னாகம் – வீதி சமிஞ்சை விளக்கு சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ராசா ரவிச்சந்திரன் என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த இருவர் சுன்னாகம் மதுபானசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் தப்பிச் சென்றதை அவதானித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றோரை துரத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தவரை கொள்ளையர்கள் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த விபத்தில் கொள்ளையர்கள் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிக குருதிப்போக்கு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், கொள்ளையர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20220124 WA0021 1

#SriLankaNews

Exit mobile version