கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் 5400 ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட குறித்த இச் சிற்பத்தை வடிவமைக்க 8 மணி நேரம் ஆகியுள்ளது.
அனைவரையும் கவர்ந்த அச்சிற்பத்தில் ‘மெர்ரி கிறிஸ்மஸ், கிறிஸ்மஸ் விழாவை கொரோனா விதிமுறைகளை மீறாமல் கொண்டாடி மகிழுங்கள்’ என்ற வாசகத்தையும் பொறித்துள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த இவர் பத்மஸ்ரீ விருது வென்ற சர்வதேச மண் சிற்பக்கலை நிபுணர் ஆவார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு வழியுறுத்தும் இக் கிறிஸ்மஸ் தாத்தா சிற்பத்தை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#IndiaNews
Leave a comment