நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் , கலாநிதி செக்டஸ் குருகுலசூரிய மற்றும் பர்ட்ரம் ரஞ்சித் ஆண்டகை போன்றோர் கலந்துக்கொண்டனர்.
தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை , முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமாவிடம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment