பசறை வராதொலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதொலை தியகொல்ல பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது சித்தப்பாவினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி சுமார் ஒரு வருட காலமாக குறித்த நபரினால் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமியே பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைக் தொடர்ந்து சிறுமியின் சித்தப்பா பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று(09) பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதையடுத்து குறித்த சிறுமி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews