உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நாளை சனிக்கிழமை இலங்கை வருகின்றார்.கொழும்பு வரும் அவர் முக்கியத்துவமிக்க சில சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையில் சீனாவின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
#Srilankanews