சீன கப்பல்களில் இருந்த உரங்களில் எவ்வித தீங்கை விளைவிக்கும் பக்டீரியாக்களும் இல்லை என சிங்கப்பூர் நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
அத்தோடு இன்றைய தினம் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, தீங்கு ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் மற்றும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை கொண்டு வந்ததாக சீன உர நிறுவனங்களுக்கும் முகவர்களுக்கும் பணம் செலுத்துவதை தடுத்துள்ளதோடு, மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 அம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment