அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத வரியை ஒரு வருடத்துக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகச் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (APEC) போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு, மற்றும் அமெரிக்க விவசாயப் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவை குறித்துச் சீனா இணக்கம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.