சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

e5388088 earth quake

சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவாகி இருந்ததுடன்  10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந் நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்து உள்ளனர். 35 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடுதுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.

2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 87 ஆயிரம் பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version