அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சீனா!!

1 bride and groom portrait fall leaves worlds best wedding photos cm leung china wedding photographers 083 0

சீனாவில் திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சீன அரசு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு இப்போது திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீன புள்ளியியல் ஆண்டுப் புத்தகம் காட்டுகிறது.

நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் அங்கு 58,70,000 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவுள்ளது.

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.

இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்படுகிறது.

Exit mobile version