IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

Share

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருவதுடன், தேவாலயக் கட்டிடங்களை இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

செங்டூ (Chengdu) நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain Covenant Church) தேவாலயத்தில் சீன பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையை நடத்தினர். இதில் தேவாலயத்தின் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ தேவாலயக் கட்டிடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

மத நடைமுறைகளைச் சீன கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் (Sinicization of Religion) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தேவாலயங்களைத் தவிர, சுயமாக இயங்கும் திருச்சபைகளைச் சட்டவிரோதமானவை என அரசு முத்திரை குத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சீனா முழுவதும் போதகர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திட்டமிட்டுத் தேடிக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தொடர் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....