images 3 8
செய்திகள்உலகம்

AI சாட்போட்களுக்குத் தடைக்கயிறு: தற்கொலைத் தூண்டுதல்களைத் தடுக்க சீனா புதிய சட்டங்களை வரைந்தது!

Share

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்கள் மூலம் பயனாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதைத் தடுக்கவும், உணர்வு ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் சீனா கடுமையான புதிய சட்ட விதிகளை முன்மொழிந்துள்ளது.

சீனாவின் இந்த புதிய வரைவுச் சட்டத்தில், சாட்போட்களுடனான உரையாடலில் ‘தற்கொலை’ (Suicide) என்ற சொல் பயன்படுத்தப்பட்டால், உடனடியாக ஒரு மனித அதிகாரி அந்த உரையாடலில் தலையிட்டு வழிகாட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் பதிவு செய்த பயனாளர்கள் அல்லது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாதாந்த பயனாளர்களைக் கொண்ட AI நிறுவனங்கள், ஆண்டுதோறும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தணிக்கைகளுக்கு (Audits) உட்பட வேண்டும்.

பயனாளர்களின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை AI நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தீவிர உணர்ச்சி மாற்றங்கள் அல்லது சாட்போட்களுக்கு அடிமையாகும் தன்மையைக் கண்டால் நிறுவனங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பதிவு செய்யும் போது தங்களது பாதுகாவலரின் விபரங்களை வழங்க வேண்டும். சுய-தீங்கு தொடர்பான உரையாடல்கள் நிகழும் போது பாதுகாவலருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

அமெரிக்காவில் ChatGPT உடன் உரையாடிய நபர் ஒருவர், சாட்போட் வழங்கிய தவறான தகவலால் தனது தாயைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்தே இத்தகைய கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில், OpenAI நிறுவனம் இவ்வாறான ஆபத்துகளைக் கையாள ‘தயார்நிலைத் தலைவர்’ (Head of Preparedness) என்ற புதிய உயர் பதவியை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...