அமெரிக்காவை வீழ்த்தி சீனா உலகின் முன்னணி செல்வந்த நாடாக முன்னேறியுள்ளது.
சீனாவின் தேறிய சொத்து மதிப்பு 514 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக திடீரென அதிகரித்துள்ளது.
அதனால் உலகின் முன்னணி செல்வந்த நாடாக சீனா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனாவின் சொத்துக்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக முன்னணி வர்த்தக ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இதுவரைகாலமும் அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WORLD