தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களுக்கு முதல்வர் பாராட்டு

99bedf62ac8a9435312cd5a554a4834d

தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் குழந்தை, பெண் உட்பட 4 பேர் சிக்கி கொண்டனர். அப்போது அவர்களை வனத்துறையினர் காப்பாற்றினர், இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டமையைத் தொடர்ந்து குறித்த வீடியோக் காட்சிகள் வைரலாகியுள்ளன.

இதேவேளை குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால்சிறப்பிக்கப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

#IndiaNews

Exit mobile version