நீட் தேர்வு விவகாரத்தில், ஆளுநரைச் சந்திக்கும் முதலமைச்சர்!

M.K.Stalin

M.K.Stalin

இந்தியாவில் மருத்துவக் கற்கைகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு குறித்துக் கலந்துரையாடும் பொருட்டு, நாளையதினம் தமிழக முதலமைச்சர், தமிழக ஆளுநரை சந்திக்கவுள்ளார்.

தமிழக அரசானது, மருத்துவக் கற்கைகளுக்கான நீட் நுழைவுத் தேர்வைத் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், நாளை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தத் தேர்வினால், வறுமைக்குட்பட்ட மற்றும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய இயலாத நிலை காணப்படுகிறது.

மாணவர்கள் இந்த விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த தேர்தல் அறிக்கையில் திமுகவினர் தாம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் பொருட்டு நாளையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து இச்சந்திப்பில் வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version