நிறைவேற்றப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் பாதீடு !!

savagaseri

இன்று சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.

இன்று காலை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கூடியது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்கு வருகைத் தந்திருந்தனர்.

தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version