வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக முனியப்பர் ஆலய முன்றலை சென்றடைந்து அங்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் பொது அமைப்புக்களும் இதில் கலந்துகொண்டனர்.
#SrilankaNews

