நாட்டில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகளில் தற்போது ஓரளவு மாற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி வாகனங்களின் விலைகள் ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு– செலவுத் திட்ட பாதீட்டின் பின்னர் வாகனங்களில் விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என அவர் தெரித்துள்ளார்.
இதேவேளை வாகனங்களின் உதிரிபாகங்களின் விலைகள் கட்டப்படுத்த முடியாத வகையில் அதிகரித்துக் காணப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வாகனங்களின் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களிளாலேயே அதிக விலைக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews