வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களை மறுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இருவருக்குமான விசேட சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
விருந்தகத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையில் சுயேட்சைக்கூழு ஊடாக தெரிவாக பிரதேச சபை உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து விருந்தக மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#SrilankaNews