இன்று நாட்டில் பல இடங்களில் பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வறிக்கையில் காலை வேளைகளில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதுடன். காலி , மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கில் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கலாம் எனவும் , சில குறித்த மாவட்டங்களுக்கு சேதங்களை குறைப்பதற்கான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது.
கனமழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews

