எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி இருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், குறித்த சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews