கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஷார செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்தில் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜே.கே.பாயை போலவே, சிலோன் பாயும் துபாயில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் மனித கடத்தல்காரர்களுடன் இந்த சந்தேகநபர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் குறித்த கடத்தல்காரர்கள் ரூ. 2 மில்லியன் முதல் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலோன் பாய் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது