மைத்திரி தலைமையில் நாளை கூடவுள்ள மத்திய செயற்குழு !!

Maithripala Sirisena pic via his Facebook

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.

இவ்விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் எவை என்பன உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

மொட்டு கட்சி தொடர்ச்சியாக  சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேறலாம் என வலியுறுத்திவருகின்றது. எனவே இது பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது எனவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Exit mobile version