புதிய அபிவிருத்திகளைக் கைவிடுக! – அரசுக்கு மத்திய வங்கி பரிந்துரை

இலங்கை மத்திய வங்கி

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாகக் கைவிடுமாறு அரசுக்கு, இலங்கை மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

சுமார் ஓராண்டு வரை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது.

அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்கும். எனினும், மத்திய வங்கியின் யோசனையை அரசு ஏற்குமா என்பது பற்றி இன்னும் தெரியவரவில்லை.

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு, தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version