கறுப்பு பட்டியலில் மத்திய வங்கி! – சீனாவின் முடிவு தவறு என்கிறார் மைத்திரி

maithripala sirisena 1568543485

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதற்கு சீனத்தூதரகம் எடுத்த முடிவு தவறானதாகும் – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்குட்படுத்துவது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சீனத்தூதுரகத்தின் இந்த நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

சீனத்தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version