சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1,275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
சீமெந்து நிறுவனங்கள் சில ஒரு மூடை சீமெந்தின் விலையை, 1,375 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1,375 ரூபாய் வரை சீமெந்தின் விலையை அதிகரித்துள்ள நிறுவனங்கள், மூடை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்தார்
#SrilankaNews