கலஹாவில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையின்போது, மாணவி குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசி ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவி வீட்டின் குளியலறையில் தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (16) கண்டி பொது வைத்தியசாலையில் சடலத்தின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews