பிரேசிலில் குகை சரிந்து விழுந்ததில், 09 பேர் சாவடைந்துள்ளனர்.
அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்களே சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.
Sao Paulo மாநிலத்தில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில், Altinopolis பகுதியில் உள்ள குகையில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தருணத்தில் திடீரென குகை சரிந்து விழுந்துள்ளது. இதில் அந்த குழுவை சேர்ந்த 10 பேர் சிக்கிக்கொண்ட நிலையில் 09 பேர் சாவடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#world