நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது !

jaffna 720x375 1 1

நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகமான மக்களை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் வதிரி, இரும்பு மதவடியில் பகுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது

குறித்த பகுதியில் வசிக்கும் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பண உதவி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர் .

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நெல்லியடி பொலிஸார், குறித்த பகுதிக்குச் சென்று அங்கு பணம் வழங்கியவர் உட்பட மூவரைக் கைதுசெய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version