காலி – மாத்தறை பிரதான வீதியின் தலவெல்ல பகுதியில் இன்று (26) காலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் மோதிய வேகத்தில் அங்கிருந்த மின் கம்பம் பலத்த சேதமடைந்துள்ளது.
மின் கம்பம் உடைந்ததால், அதிலிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பிகள் (High Voltage Lines) பிரதான வீதியில் வீழ்ந்துள்ளன. இதன் காரணமாக அந்த வீதியூடான கனரக வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மின் கம்பிகளை அகற்றி, மின் விநியோகத்தைச் சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சிறிய வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.