தீவிரவாதிகளால் இங்கிலாந்தில் கார் குண்டுத்தாக்குதல்!

car 2

இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர்.

கார் நின்ற சில விநாடி அதில் இருந்து குண்டு வெடித்தது.

இதில் கார் முழுமையாகச் சிதறியது.

காரில் இருந்த பயணி அந்த இடத்திலேயேசாவடைந்தார் .

காரின் சாரதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

அவர் மோசமான நிலையில் இருந்து தப்பித்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு பொலிஸாரும்,இராணுவமும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் வைத்தியசாலையிலிருந்து இருந்து 1 கி.மீட்டர் தூரம் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கிருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

கார் குண்டு தாக்குதலில் சாவடைந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் சோதனைகள் இடம்பெற்று வருகிறது.

Exit mobile version