இராணுவ புலனாய்வாளர்களால் முறியடிக்கப்பட்டது கஞ்சா கடத்தல்!!

WhatsApp Image 2021 12 17 at 4.08.01 PM

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சித்தங்கேணி மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை கடத்திச் சென்றபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version