தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பல கஞ்சா செடிகளை அந்நாட்டு பொலிஸார் அகற்றியுள்ளனர்.
கஞ்சா செடிகள் பழங்குடியின கொய்சான் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு சொந்தமானது, அவர்களில் சிலர் மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
‘கொய்சான் ராஜா’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர்களின் தலைவர், ஒரு பெரிய கஞ்சா செடியில் தொங்கிக் கொண்டிருந்தபோது, அவரை பொஸிார் இழுத்துச் சென்றனர்.
அப்போது அவர் “பொலிஸ் நீங்கள் போரை ஆரம்பித்துவிட்டீர்கள்” என்று கூச்சலிட்டதாகவும் நாங்கள் இங்கு நிம்மதியாக இருந்தோம். உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ”என்று அவர் பொலிஸாருக்கு சவால் விடுத்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews