நாட்டில் மெழுகுதிரியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மெழுகுவர்த்தி ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என மெழுகுவர்த்தி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மெழுகுவர்த்தி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews