தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

25 69090d80f023d

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பர்டோ தியோடோரோ ஜூனியர் மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கிண்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

நோக்கம்: இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளின் இராணுவப் படைகளுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், தென்சீனக் கடல் பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று பிலிப்பின்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version