உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைப்பதே சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.