” இலங்கை அரசியலில் எவராலும் தனித்து பயணிக்க முடியாது. இணைந்து பயணித்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.”- என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பங்காளிக்கட்சிகள் அரசிலிருந்து வெளியேறினாலும், மொட்டு கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையியே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உர விவகாரத்தில் இலங்கையிலுள்ள நிபுணர்களால் தெரிவிக்கப்படும் விடயங்களையே அரசு கேட்க வேண்டும். மாறாக வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகள் எமக்கு அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
#SriLankaNews