நுவரெலியாவில் ஆரம்பமாகும் கேபிள் கார் திட்டம்!!!

265499814 5534305919930292 5974600237052481791 n

நுவரெலியா சுற்றுலாப் பிராந்தியத்தில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதன்முறையாக சுவிஸ் முதலீட்டாளர் ஒருவர் கைச்சாத்திட்டுள்ளார்.

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து நுவரெலியா கிரிகோரி ஏரி வரை 4 கிலோமீற்றர் தூரத்திற்கு சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த கேபிள் கார் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதுடன் 18 மாதங்களுக்குள் திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SrilankaNews

 

 

Exit mobile version