அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், புதிய டிஜிட்டல் அட்டை (Digital Card) முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திட்டத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள்,தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
இணையவழி வங்கி முறைமை (Online Banking) ஊடாகத் தேவையான எரிபொருளுக்கான பணத்தை நேரடியாக ஈடுசெய்ய முடியும். காகித ஆவண முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படுவதால் நிர்வாகப் பணிகள் வேகமடையும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வங்கி (Bank of Ceylon) மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகிய இரண்டும் இணைந்து புதிய டிஜிட்டல் அட்டையை வடிவமைத்துள்ளன.
கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய, முதற்கட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் (Presidential Secretariat) வாகனத் தொகுதிக்கு இந்த முறை அமுல்படுத்தப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த டிஜிட்டல் அட்டை முறை விரிவுபடுத்தப்படும்.