articles2FSjIn8EoqvQGDicvUvLR1
செய்திகள்இலங்கை

திரிபோசா உற்பத்திக்கு வலுசேர்க்கும் புதிய திட்டம்: 10 மில்லியன் டொலர் நிதியுதவியில் 7,500 விவசாயிகள் பயன்பெறுவர்!

Share

இலங்கையில் திரிபோசா (Thriposha) உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்தின் தரத்தை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும் புதிய தேசிய கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமை”.

இத்திட்டத்திற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை (KOICA) 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இக்கருத்திட்டம் 2025 முதல் 2029 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

அனுராதபுரம், மொனறாகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 7,500 சோளச் செய்கையாளர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டம், காலநிலை மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய மற்றும் போஷாக்கு நிறைந்த சோள உற்பத்தியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் திரிபோசா விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...