சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் சுமார் 5,000 அரிசி பொதிகள் அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் 6.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டு அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.