கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருவதனால் பஸ் தொழில்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பெருந்தொகையான பஸ் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக சில பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.
மேலும், பஸ் ஊழியர்களுக்கு ஊக்கமருந்து தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் விரைந்து செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பஸ் ஊழியர்களும் பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பஸ்களில் பயணிக்க வேண்டுமெனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews