பட்டாசு வெடியுங்கள் – அண்ணாமலை

Bjp Annamalai 16485449363x2 1

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (22) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது,

பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். சிவகாசி நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள். 8 லட்சம் பேர் அங்கு உள்ளனர். நாடு முழுவதும் 95 வீத பட்டாசு நம் ஊரில் இருந்து தான் செல்கிறது.

அதனால் இந்த முறை நிறைய பட்டாசு வெடிப்போம். குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசு நிறைய வெடியுங்கள். ஒருநாள் ஏற்படும் காற்று மாசு பற்றி கவலைப்படாதீர்கள் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.

சிவகாசி வாழவேண்டும், தமிழகம் வாழவேண்டும். அதனால் நிறைய பட்டாசு வெடியுங்கள். தமிழக மக்கள், நமது சகோதர, சகோதரிகளுக்கு இன்பம் பெருகும் தீபாவளி, மன அமைதி தரும் தீபாவளி, அற்புதமான தீபாவளியாக இது அமையட்டும். நிறைய பட்டாசு வெடியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

#Indianews

Exit mobile version