அவுஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் காட்டுத் தீ எரிவதால், அதன் புகை மண்டலம் வானளவில் பரவியுள்ளது.
மார்கரெட் ரிவர் என்னும் பகுதியில், கடந்த 3 நாட்களாக இவ்வாறு தீப்பற்றி எரிகிறது எனத் தெரியவருகிறது. இந்தநிலையில் தீயைக் கடுப்படுத்தும் முயற்சியில் 100 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அதிக குளிரான சீதோஷ்ண நிலை காரணமாக தற்போது தீயின் வேகம் சற்று தணிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வானில் பரவிய புகைமண்டலம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
#WorldNews
Leave a comment