பிரித்தானியாவின் – ஹால் நகரம் அருகே தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நகரை சுற்றியுள்ள பகுதிகள் புகைமண்டலமாக காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் ஹால் நகரத்துக்கு மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் திடீரென மிகப்பெரும் வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலைக் கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும், அவர்களுக்காக உள்ளூர் தேவாலய மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களை அவர்களின் வீடுகள் மற்றும் ஜன்னல்களை மூடி அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#World
Source – BBCNews
Leave a comment