புதைக்கப்படும் உண்மைகள்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!!!

image 6ec3af4bbb 4
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்.
நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைப் போன்று கிரீடத்தை அணிந்து கொண்டு செயற்படாது மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைக் கழற்றிவிட்டு வெளியேற வேண்டும்.
இந்தத் தாக்குதலை அறிந்த உயர் பதவியில் இருப்போர் மற்றும் வாக்குறுதிகளை வழங்கியோர் இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள்  இதற்கு அவர்களின் பங்கு இருக்குமோ என்ற ஐயப்பாடு காணப்படுகிறது.
நாம் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version