எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூடஉள்ளது. அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறவுள்ளது.
செவித்திறன் குறைபாடுள்ளவர்களைக் கருத்தில்கொண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் இம்முறை சைகை மொழியிலும் இடம்பெறவுள்ளமை விசேடமாகும்.
எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் 12 ஆம் திகதி தவிர ஏனைய நாட்களிலும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது 2 வருடங்களின் பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews