இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!

valvettithurai

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பாதீடு தொடர்பான கூட்டம் தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது, பாதீடு திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இப் பாதீடும் தோற்கடிக்கப்பட்டது.

8 உறுப்பினர்கள் பாதீடுக்கு ஆதரவாகவும் 9 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் திருத்தங்களுடன் பாதீடு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்று காரணமாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கே.கருணாந்தராசா கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற தவிசாரர் தெரிவில், புதிய தவிசாளராக என். செல்வேந்திரா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு பாதீடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version