மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

GettyImages 1202240221

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS, தனது நீண்டகால இடைவேளைக்குப் பிறகு புதிய பாடல் தொகுப்பை (Album) வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

குழுவின் நிர்வாக நிறுவனமான ‘Big Hit Music’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிய அல்பம் எதிர்வரும் மார்ச் 20-ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.

2022-இல் வெளியான “Proof” தொகுப்பிற்குப் பிறகு, குழுவின் ஏழு உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) இணைந்து வெளியிடும் முதல் முழுமையான பாடல் தொகுப்பு இதுவாகும்.

இந்தப் புதிய அல்பம் வெளியானதைத் தொடர்ந்து, BTS உறுப்பினர்கள் ஒரு பிரம்மாண்டமான உலகச் சுற்றுப்பயணத்தை (World Tour) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், BTS உறுப்பினர்கள் அனைவரும் தென் கொரியாவின் கட்டாய இராணுவச் சேவையில் இணைந்ததால், குழுவின் பொது நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவர்கள் அனைவரும் பணிகளை முடித்துத் திரும்பியுள்ள நிலையில், இந்த மீள்வருகை ரசிகர்களுக்கு ஒரு “சிறப்பு அனுபவமாக” இருக்கும் என HYBE நிறுவனத்தின் கீழ் உள்ள Big Hit Music தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் #BTSIsBack மற்றும் #BTSComeback2026 போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

 

 

Exit mobile version